திங்கள், 18 நவம்பர், 2013

இந்த பாடசாலையின் நூற்றாண்டு விழாவுக்கான நிதி கொடுக்க விரும்பியோர்( சுவிசில்)தொடர்பு கொள்ள வேண்டியவர் 
உதயன் தோமஸ்  0313516230

புங்குடுதீவு சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் -சிவ -சந்திரபாலன் 
_____________________________________________________

புங்குடுதீவில் அமைந்துள்ள உயர்தரப் பாடசாலைகளில் இதுவும்  ஒன்று .புங்குடுதீவின்  மேட்குபகுதியான இறுபிட்டியில் இந்த கல்விச்சாலை அமைந்துள்ளது .புங்குடுதீவின் கல்வித் தந்தை பசுபதிபிள்ளை விதானையரும் வேலாயுதர் விஸ்வலிங்கம் அவர்களுமாக இணைந்து இந்தப் பகுதியில் ஒரு பாடசாலை அமைவதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டனர்.முதலில் பெருங்காடு-இருபிட்டி பிரதான வீதியில் நான்கு பரப்புக் காணியில்மதகுரு  நடராசா ஐயரின் ஆசியுடன் ஒரு கட்டிடம் உருவாக்கப் பட்டு இந்த இடத்தின் அருகாமையில் உள்ள இருபிட்டி பெரியபுல சித்தி விநாயகர் ஆலயத்தின் நினைவாக பெயரிடப்பட்டு திறக்கப் பட்டது .1914இல் ச.நாகலிங்கம் தலையாசிரியராக பணி தொடங்க  சுமார் முப்பது மாணவர்களுடன்1926 வரை பசுபதிபிள்ளை அவர்களின் நிர்வாகத்தில் இயங்கிவந்தது .பின்னர் மற்றைய பாடசாலைகள் போலவே சைவ வித்தியா விருத்தி சங்கம் இப்பாடசாலையை  ஏற்றுக் கொண்டது .தொடர்ந்து ஆ.சுப்பிரமணியம் தலை ஆசிரியராக பதவி வகித்த காலத்தில் புதிய நிலையான ஒரு கட்டிடத்தை வர்த்தகர் சே.செல்லத்துரையின் ஆதரவில் முருகேசு உடையாரின் ஒத்துழைப்புடனும் கட்டி பாடசாலையை விரிவாக்கினர்.ஆம் ஆண்டு இப்பாடசாலையை அரசாங்கம் சுவீகரித்துக் கொண்டது.பின்வந்த காலங்களில் புங்குட்தீவு மேற்ற்குப் பகுதிக்காக ஒரு உயர்தர பாடசாலை தேவை என்ற கோட்பாடில் 
அதிபர்களாக இருந்த கு.வி.செல்லத்துரை அவரது மனைவி
திருமதி.ப.செல்லத்துரை கா.கு.கனகசுந்தரம் ஆகியோர் எடுத்த முயற்சிக்கு பலனாக மகா வித்தியலயமா க  தரம் உயர்த்தப் பட்டது .இதன் நிமித்தம் சுமார் 600  மாணவர்களையும்   15ஆசிரியர்களையும் அந்த காலத்தில் கொண்டு இயங்கியது குறிப்பிடத் தக்கது .புங்குடுதீவில்  இராணுவம் உட்புகுந்த போது1991முதல் தற்காலிகமாக நா.தர்மலிங்கம் உப அதிபர் தா.தவராசா ஆகியோரின் செயல்பாட்டினால் ஆனைப்பந்தி பட்டப் படிப்புகள் கல்லூரியில் இயங்க தொடங்கியது .இல் யாழ் இடம்பெயர்வினால் அதுவும் இயங்க நிலையை எட்டியது . பின்னர் மெதுவாக புங்குடுதீவு மக்கள் மீளக் குடியேறியதை அடுத்து கிராம பெரியோகள் கேட்டு கொண்டபடி  பிரதேசக் கல்விப் பணிப்பாளரினால் 1997ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்கபட்டு சிறப்பாக கல்விப் பணியை ஆற்றுகிறது இந்த பாடசாலையின் அதிபர்களாக ச.நகளின்கமா.சுப்பிரமணியம் நா.சோமசுந்தரம் திருமதி ப. செல்லத்துரை ,சி.நடேசு க.ஏரம்பு நா.தர்மலிங்கம் ந.கைலைநாதன் ஆகியோர் சிறப்பான முறையில் கடமை ஆற்றி பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரிது ம் உதவி புரிந்தமை மறக்க முடியாதது.இந்தப்பாடசாலையில் கல்வி கற்றோர் பெரும் பதவிகள் செல்வந்தர்கள் விற்பன்னர்காக உலகில்  வலம்    வருகின்றனர்..இந்த பாடசாலையின் நூற்றாண்டு விழாவை 2013 இல் கொண்டாடவென  ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத் தக்கது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக