ஞாயிறு, 8 டிசம்பர், 2013

2014 தை மாதம் நூற்றாண்டு விழா: கூட்டத்தில் முடிவு!நன்றி பாடசாலை இணையம் 

கடந்த ஞாயிறு 29.9.2013 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் யாழ் புங்குடுதீவு சித்திவிநாயர் மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சம்பந்தமான கூட்டம் தலைவர் பேராசிரியர் குகபாலன் தலைமையில் நடைபெற்றது

அதிபர் கலைநாதன் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் பழையமாணவர்களான மீனாட்சி ஆசிரியை, தவரூபன், கமலநாயகி ஆசிரியை தற்போது கொக்குவில் இராமகிருஸ்ண வித்தியாலய அதிபர் ( செயலாளர், ) , ஓய்வு பெற்ற தபாலதிபர் தங்கராஜா( பொருளாளர்) , ஆ.விசுவலிங்கம், நடராசா, பரமேஸ்வரன், தியாகராஜா(ஓய்வு பெற்ற ஆசிரியர்) தனபாலசிஜங்கம் , பிரேம்குமார் (மரணவிசாரணை அதிகாரி) ஆகியோர் கலந்து கருத்துக்களை பரிமாறினர்.
நன்கொடையாக கிடைத்த காணிகள் பற்றியும் வாங்கப்படவேண்டிய காணிகள் பற்றியும் பேசப்பட்டது.பழைய மாணமாணவர் குழுக்களின் ஊடாகவும் பழையமாணவர்கள் ஊடாகவும் கிடைத்த கிடைக்க இருக்கின்ற பண உதவிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் கனடாவில் இருந்து 622000 ரூபா கிடைத்திருப்பதாகவும் பிரான்சில் இருந்து ஒருதொகைப்பணம் (550000) வர உள்ளதாகவும் , அதைவிட சில நபர்களால் சிறு சிறு தொகைகள்(500 Euro , 1500 Euro, Rs 37000, அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவை தமது கையினை இன்னும் வந்தடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. (அவை பற்றி இணையத்தளத்தில் முழுமையாக பின்னர் அறியத்தரப்படும்) எனினும் பௌதீக வளங்களை மேம்படுத்த திருத்த வேலைகள் மதில் வேலைகள் செய்து முடிக்க கிடைக்க உள்ள பணத்தொகையிலும் நிறைய தேவைப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.கனடாப்பணம் 3 இல் 1 பங்கினை மட்டுமே செலவழிக்க அனுமதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது இருப்பினும்
அவசியமான பல வேலைத்திட்டங்கள் செய்யப்படவேண்டியுள்ளது
மலசல கூட புனரமைப்பு
சுற்று மதில்
முகப்பு வளையி
தீந்தை பூசுதல்
நிலம் பூசுதல்
வளாகத்தினை அழகுபடுத்தல்
என்பன முக்கிய தேவைகளாகவும் , பாடசாலைத்தோற்றத்தினையும் வசதிகளையும் வழங்குவதற்கு அவசியமானதாகவும் உள்ளது. இருப்பினும் சில நாடுகளி்ல் இருந்து பணம் அனுப்ப விரும்புபவர்கள் நிலையான வைப்பில் இடுவது பற்றி வலியுறுத்துவதாக தெரிகிறது முதலில் நாம் பாடசாலையின் மேற்படி பௌதீக வளங்களை புனரமைக்கவேண்டும் அதன் பின்னர் நிலையான வைப்பிட்டு அதனை சிறிது சிறிதாக பயன்படுத்துவது பற்றி சிந்திக்கலாம்.என கருத்து பரிமாறப்பட்டது.
பணத்தினை இனிவரும் நிர்வாகங்கள் சரிவர பயன்படுத்தாத பட்சத்தில் அதனது இலக்கு பொய்த்துவிடவும் வாய்ப்புள்ளது எனவே தற்போது செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை செய்து ஒரு கட்டுக்கோப்பான வளங்களுடன் கூடிய பாடசாலையினை நுாற்றாண்டு விழாவுக்கு முன்னதாக ஏற்படுத்தவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது
நூற்றாண்டு விழா தை மாதம் 20 அளவில் திட்டமிடப்படுகிறது. நிதி கையாளுகைகள் பற்றி கவலைப்படத்தேவையில்லை என்றும் சகல விடயங்களும் வங்கி ஊடாகவே செய்யப்படும் என்றும் கணக்கு வழக்குகள் நேர்மையாக பேணப்படும் என்றும் உறுதி கூறப்பட்டது.
வங்கியின் பெயர் : மக்கள் வங்கி (Peoples Bank)
கிளை : யாழ்.பல்கலைகழகம் (University of Jaffna)
வங்கி கணக்கு இலக்கம் : 162-2-001-6-0042704.
நூற்றாண்டு விழாவுடன் பௌதீக வளங்களை கொஞ்சம் பெருக்கவேண்டியுள்ளது பின்னர் மற்ற உதவிகள் பற்றி சிந்திக்கலாம். மற்ற உதவிகளுக்கு நிலையான வைப்பில் இடவேண்டும தான் ஆனால் இப்போது முக்கியம் பாடசாலையினை வளமுள்ளதாகவும் வசதியுளள்தாகவும் மாற்றவேண்டும் . மாணவர்களிடத்தில் ஆர்வத்தினை இது ஏற்படுத்தும். அதிபர் எல்லாவற்றையும் பழையமாணவர்கள் ஊடாகவும் அந்த சங்கங்களின் ஊடாகவும் செய்யவே விரும்புகின்றார்..இருப்பினும் அவரது வழிகாட்டலிலேயே சகல நடவடிக்ககைகளும் நடைபெறும். நிதி வியடத்தில் அதிபர் அதனை நேரடியாக கையாள விரும்பவில்லை என்று தெரிகிறது. அது அவரது நிர்வாக நடைமுறைகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதும் பல அரச விதிமுறைகளை அவர் கடைப்பிடிக்கவேண்டிய தேவை இருக்கும் என்றும் கூறப்பட்டது. எனவே தனது வழிகாட்டலில் சபையே சகலதையும் செய்யுமாறும் தான் அதனை மேற்பார்வை செய்வதாகவும் கூறினார்.
ஒருதொகுதி சுற்றுமதில் மற்றும் மலசல கூடத்தினை புனரமைக்கும் வேலைகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்ககிறது.
அத்துடன் மலர்க்குழு நுாற்றாண்டு விழா மலரை சிறப்புற ஒரு ஆவணமாக வெளியிட தனது பணிக்களை இப்போதே ஆரம்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது மலராசிரியராக தவரூபன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.மலர்க்குழுவில் பேராசிரியர் கா.குகபாலன்,அதிபர் கலைநாதன் ,செயலாளர் க.கமலநாயகி ,சண்முகநாதன்ஈதியாகராஜா,குலசிங்கம்,பிரேம்குமார்,ஆசிரியைகள் கிருபாலினி,தட்சாயினிஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
school

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக